Tuesday, September 15, 2020

 'உளி தாங்கு'

'சிலையாகலாம்'

'வழிபாடுண்டு"


என்கிறார்கள்

எல்லோரும்.


உள்ளேயோ

வெளியிலோ


ஒருவர்க்கும்

ஒன்றுக்கும் 


உதவாத சிலையாக

நிற்பதிலும்,


பல்லோரும் , பலகாலம்

பாதம் பதித்து, மிதித்து 

ஏறிச்செல்லும்

படியாய்க் கிடந்து 

பணிசெய்யவே

நினைக்கிறேன்.


நான்

உளிதாங்க ஒளியவில்லை.


'நல்லபடியாய்' ஆக

உளி தாங்குவேன்.

                              -பூவனத்தான்.

15/92020

No comments:

Post a Comment