Tuesday, September 15, 2020

இலக்கியச் சொல் வரிசை-8

நற்றிணை (133)

நற்றமனார்.

*

 " ...காதல் அம் கிளவி

இரும்பு செய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த

தோய் மடற் சில்நீர் போல்

நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே."


அன்பிற் தோய்ப்போம் 

நம் சொற்கள் யாவையும்.


---

போராட்டங்களாலும், புண்களாலும், சுமைகளாலும், சோகங்களாலும் நொந்து நூலெனக் கிடக்கும் மாந்தர்க்கு  அன்பு விரவிய இனிய சொற்கள்,  சிறிதேனும் இன்பந்தரும்.

வழங்குவோம் இனிதே நிறைய.

( பாடலில்,

 தலைவன் " நாம் உறு துயரம் செய்யலர்" என்ற தலைவியின் நம்பிக்கைச் சொல்லே இனிதெனும் சூழல்.)

15/9/2020

No comments:

Post a Comment