இலக்கியச் சொல் வரிசை-9
நற்றிணை (46)
பாடியவர் அறியப்படவில்லை.
" வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து..."
காக்க காக்க,
காக்க வேண்டியதை.
*
எய்து விடுத்த அம்பின் நிழல் இலக்கில் தைக்கும் நிலையில் சடுதியில் மறைவதுபோல்,
பொருள் முதலானவை நிலையாது.
உடைந்த சிப்பிகளையும் கூழாங்கற்களையும்
பொறுக்குவதில் வாழ்க்கை சரேலென்று கழிந்துவிடாமல்,
நிலைப்பன பேணி
நினைக்கப்பட வாழ்தல்
வேண்டும்.
' பேணீர் ஆகுவீர்'.
15/9/2020
No comments:
Post a Comment