"தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?"
உணர்வோம்.
---
14/9/2020
இலக்கியச் சொல் வரிசை-6
நற்றிணை (130)
நெய்தல் தத்தனார்.
நாட்டைத் திறம்படக் காக்கும் நல்ல தலைவனுள்ள நாட்டில்,
மக்கள் அவரவர் உழைப்பில் உவந்து வாழ்வது சிறப்பு.
தத்தம் கடமைகளாற்றி உழைத்துப் பெறும் தம் வருவாய்க்குள் வாழ்க்கை நடத்துவதிலும் இனிது வேறேதுமில்லை என்பது முந்தையோர் கொள்கை.
'வரும் வழி' சிறிதாயினும், அதற்குள் நிறைவாகத் தொடர்வோம் வாழ்வினிமை கூட்ட.
No comments:
Post a Comment