Saturday, September 25, 2021

இதுவும் 

1826 இல் 

தாண்டவராய முதலியார் தொகுத்த 

கதா மஞ்சரி என்ற முற்கால கதைத் தொகுப்பில் கண்டதொரு கதை.

தொகுப்பிலுள்ள 

அக (88) கதைகளுக்கும் 

தலைப்புக் கொடுக்கப்படவில்லை. கதை எண் மட்டும்தான். தமிழ் எண்களில்.

(௧= 1

௨= 2

௩= 3

௪= 4

௫ = 5

௬ = 6

௭= 7

௮ = 8

௯ = 9

௰ = 10.)


கதை இது தான்.

*

௪ ௪ (44)


பணத்தாசையில்லாதவொரு சந்நியாசி காட்டின் வழி போகும்போதங்கேயொரு பணப் புதையலைக் கண்டு பயந்துதோடினான்-

அப்போதெதிராகவொரு வேலைக்காரனோடு வந்த இரண்டு  சந்நியாசிகளிவனைப் பார்த்து நீயேனோடுகிறாய் என்றார்கள்- 


அங்கேயாட்கொல்லியை பார்த்துப் பயந்துதோடுகிறேனென்றான்-


பிறகவர்கள் பணத்தைக் குறித்தாட்கொல்லி என்று சொல்கிறானிவன் முட்டாளென்று நினைத்தங்கே போயந்தப் பணத்தையெடுத்துக்கொண்டு போனார்கள்-

 இவர்களுடைய வேலைக்காரனிவர்களைக் கொன்று போட்டாலந்தப் பணத்தைத் தானெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர்களுக்குச் சமைக்கிற சோற்றில் விஷங் கலந்து சமைத்து வைத்தான்-

சந்நியாசிகளிருவரும் வேலைக்காரனொருவேளை தங்களைப் பங்கு கேட்பானொன்று நினைத்துக் குளத்திலே குளிக்கும்போதவனைத் தண்ணீரிலமிழ்த்திக் கொன்று விட்டு வந்து 

பிறகவன் சமைத்த சோற்றைத் தின்றவர்களும்மிறந்தாட்கொல்லி என்ற வார்த்தையை நிசமாக்கினார்கள்.

*


'சினம் சேர்ந்தாரைக் கொல்லி' என்ற  வள்ளுவ அறிவுரை நமக்குண்டு.

இக்கதை

' பணமும் சேர்ந்தாரைக் கொல்லி' எனப் பயமுறுத்துகிறதே.


எச்சரிக்கை.

No comments:

Post a Comment