இப்போதெல்லாம்
வைத்திருந்ததைத் தேடுவதற்கேஅதிக நேரம் ஆகிறது.
அதிலொன்று இது.
முன்பொரு முறை நண்பர் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் ( Sivakumar Rangasamy ) அவர்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் இத்தகவலைக் குறிப்பிட்டேன். ஆனால் அச்சமயம் இந்த நாளிதழ் நறுக்கு நகல் கையிலகப்படவில்லை.
பின்னர் (2015ல்) பதிவிட்டது கிடைத்தது.
தற்போது Mark Zuckerberg நினைவுபடுத்தி மீண்டும்...
*
1986ல்
சட்டக் கல்வி பயின்று கொண்டிருந்தபோது,
LAW FOUNDATION TAMILNADU
எனும் சிந்தனைக் களம் நண்பர்களுடன் இணைந்து ஏற்படுத்தினோம்.
அதன் ஒரு நிகழ்வாக-
ALL INDIA LAW SEMINAR ஏற்பாடு.
மாநாட்டில் முதன்மை உரை:
மனித உரிமைக் காவலர்
நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ணையர்.
தனிமையில் சந்திக்க வாய்த்தபோது,
"சட்டம் படிக்க நீ முனைந்தது மகிழ்ச்சி.இருப்பினும் ஒரு அதிலொரு துறையைத் தேர்ந்து ஆழக் கற்றுக்கொள்" என வழிகாட்டடினார்.
குறிகேட்பது போல,
அவரிடமே "எந்தத் துறையைத் தேர்ந்து எடுக்கலாம்" என
அப்போதைய அறியாமையில் கேட்டேன்.
என்னை நோக்கி,
"இந்த நிகழ்ச்சிக்கு நீ
என்னை அழைக்க மூன்று கடிதங்கள் எழுதியுள்ளாய்.
on enjoying the tune and tenor of your epistles, I am sure that you would be able to contribute to Human Rights and go for that discipline" என்று அன்புடன் ஆற்றுப்படுத்தினார்.
அதன்பின் பத்தாண்டுகள்அர்ச்சுனக் குறிபார்ப்பாக…
என் பார்வை மனித உரிமைக்களத்தில் மட்டுமே.
என்முதல் நூலுக்கு அவர் அணிந்துரை பெறமுயன்றேன்;
வாய்க்கவில்லை.
அதன்பின்
இரண்டாவது ஆங்கில நூலுக்கும்
இயலவில்லை.
புத்தகத்தைப் படித்துவிட்டு அவரே
THE HINDU நாளிதழுக்கு REVIEW எழுத விரும்பினார்.
ஆனால் அதற்குள் அவ்விதழில் இந்த நூல் குறித்த ஒரு REVIEW வந்துவிட்டது.
இருப்பினும், ஆற்றுப்படுத்தப் பாயும் பேரன்புப் பிரவாகமாக அவரே
THE HINDU அலுவலகத்தைத்
தொடர்புகொண்டு ,
" இந்நூலுக்கு
முன் வந்த REVIEW போதாது. எனது REVIEW வைத் தருகிறேன்" என அனுப்பி வெளியான REVIEW இங்கே.
வெகுநாள் கழித்து NAAC பணியில் கேரள மாநிலம் சென்றபோது அவரது இல்லம் சென்று அவரைச் சந்தித்தேன்.
அப்போது,
THE HINDU வரலாற்றில் ஒரே நூலுக்கு இரண்டுமுறை REVIEW எப்படி வந்தது என்ற முன் சொல்லப்பட்ட நிகழ்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
சந்திப்பின் போது அவரது தகவல் அளித்த வற்றாத மகிழ்வும்,
அப்பெருந்தகையின் பேரன்பும் மறக்கவும் கூடுமோ?
இன்று என் படிப்பறை ஒழுங்கு படுத்தும் பணியில்
இப்பொக்கிஷம் கண்ணில் பட்டதே ...
இங்கே பகிர்வுக்கு
*
(Originally posted in FB on Oct 22, 2015)
No comments:
Post a Comment