" பழகிய பகையும் பிரிவின்னாதே"
புரிந்து வாழ்வோம்.
---
இலக்கியச் சொல் வரிசை-3
நற்றிணை (108)
பாடிய புலவர் பெயர் அறியப்படவில்லை.
*
பிரிவு பெருஞ்சோகம்.
'பழகிய பகையைப் பிரிதலே கொடுமை' என்கிறது நம் முந்தையோர் சொல்.
அவ்வாறான உயர் நிலையில்,
நட்பினைப் பேணிப் பிரிவிலாது காக்க எவ்வளவு கவனம் தேவை?
"கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை"( குறள் 789)யில் நட்பிருக்க வள்ளுவம் போதிக்கிறது.
ஈர்க்கு இடைப்படா நிலையில் நட்பு பாராட்டவே நமக்கு நல்வழி காட்டப்பட்டுள்ளது.
நல்வழி நாளும் செல்வோம்.
9/9/2020

No comments:
Post a Comment