Saturday, September 5, 2020

புதிய இற்செறிப்பு

இற்செறித்தல்
ஏற்றுள்ளேன்.


வழக்கம் போலவே
அறிவும் உணர்ச்சியும் 
பிணக்கில் நிற்கின்றன.

'யாயும் ஞாயும்
யாராகியரோ'
"நீயும் நானும்
ஓர் நிறையே"
என்றே இருந்தேன்
இத்தனை நாள். 

இன்றோ?

உனை நான் 
'எட்டிநில்'லெனச்
சட்டெனக் கைநீட்ட
முற்றும் முடியலையே.

என்ன வழி?

இத்தனை வயதில்

முகஞ்சுழித்துக்
கைகாலுதறிச்
சங்கிலூற்றும்
கசப்புமருந்தருந்தும்
கைக்குழந்தை போல...

நடை மறந்து
படை துறந்து
உடை சுருக்கி
நூலிடையே
'கிடை'யாய்...

(ஏடாகூட எண்ணம்
தவிர்ப்பீர்.
எழுதுநூல் இது.)

'உண்டாலம்ம
இவ்வுலகம்'

''என்னால்
உனக்கில்லை
இன்னல்'' 

என
உணர்த்திடவே
இற்செறித்தல்
ஏற்றுளேன்.


இனிது சூழட்டும் உலகில் .
*

No comments:

Post a Comment