" பழி பிறிதாகல் பண்புமார் அன்றே."
அறிவோம்.
*
10/9/2020
இலக்கியச் சொல் வரிசை-4
நற்றிணை (117)
குன்றியனார்.
*
'பழி ஓரிடம்,பாவம் ஓரிடம்' என்பது வழக்கு.
செய் தவறுக்கான பழியை மக்களில் பலர் அடுத்தவர்க்கு நகர்த்திவிடவே ஆர்வங்காட்டுகின்றனர்.
அது பண்பன்று.
'பழியெனின் உயிருங்கொடுக்குவர்' நம் மரபினர்.
பழிக்கலனைப் பக்கத்தார்க்கனுப்ப முயலாமல்,
தவறு நமதாயின் நேர்மையாக ஏற்றுத் தகைமை காட்டும் பண்பு வளர்ப்போம் தொடர்ந்து.
சிறந்த பயனுள்ள பதிவுகள்.வாழ்த்துக்கள் அய்யா
ReplyDelete