Tuesday, December 7, 2021


https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

இன்று நிகழ்த்திய திருத்தம்.


 .....உண்மையில் பாரதியின் முதல் சிறுகதை 1905ல் தொடங்கி - அவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சக்கரவர்த்தினி என்ற இதழில்- பகுதிகளாக வெளியிடப்பட்ட 'துளஸிபயி என்ற இரஜபுதனக் கன்னிகையின் சரித்திரம்' என்பதாகும். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை என்பது பலரால் சொல்லப்பட்டுவரும் விவாதத்திற்குரிய கருத்தாகும். சிறுகதை என்ற புதிய இலக்கியவகை தமிழில் அறிமுகமானபோது - சிறுகதை என்பது என்ன?என்ற முடிவான, ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து ஏதும் உருப்பெற்று நிலைபெறாத அக்காலகட்டத்தில் (1900-1920), பாரதியார், மாதவையா,வ.வே.சு. ஐயர் ஆகியோர் தத்தமக்கு வாகான வகையாகச் சோதனை முயற்சிகளாக எழுதினர். வ.வே.சு ஐயரே பிற்காலத்தில் நெடிய சரித்திரக் கதைகள் எழுதக் 'கைப்பழக்கமாகவே ' சிறுகதைகள் எழுதி வருவதாகத் தன் நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் வார்த்தைப்படுத்தியுள்ளார்.

தாம் சுயமாகச் சிறுகதைகள் எழுதும் முன்னரே தாகூரின் வங்கமொழிச் சிறுகதைகளை மூலமொழியறிந்திருந்த பாரதியார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளாரென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் பார்த்தால், பாரதியார் தமது சொந்தச் சிறுகதைகளைத் தாம் விரும்பிய-'சொல்புதிது, பொருள் புதிது' எனும் முற்போக்கு எண்ணப்படி வார்த்தளித்துள்ளாரென்ற ஏற்பே நியாயமானதாக இருக்கும்.

தற்காலத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் மூல மூவர்களான பாரதியார்,மாதவையா, வ.வே.சு. ஐயர் ஆகிய மூவருமே 1925வாக்கில் இயற்கையடைந்துவிட்ட பின்னர் ஏற்பட்டிருந்த வெற்றிடக்காலம் நீண்டு தொடர்ந்து விடாமல் தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும்......


No comments:

Post a Comment