Sunday, September 12, 2021

நேற்றைய காணொளி


தமிழின் முதல் சிறுகதைத் தொகுதி 

வ.வே.சு ஐயரவர்களது 'மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள்'

 (1919) என்று பலர் தொடர்ந்து தவறாகக் கதைத்து வருவதைத் தெரிவித்து-

அதற்கு முன்னர் 

1915 ல் 68 கதைகள் 250 பக்கங்கள் உள்ள  தொகுதி ஒன்று

திருச்சிராப்பள்ளியிலிருந்து S.G.இராமாநுஜலு நாயுடு என்பவர் இயற்றி வந்துள்ளது என்பதை அறிவிக்க.

*

தமிழில் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின்

 "குளத்தங்கரை அரச மரம் " என்ற கதை அல்ல 

என்பது இதற்கு முந்தைய எமது காணொளிக் கீற்றுகளில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

தற்போது பேசுவது தமிழின் முதல் சிறுகதைத் தொகுதி எது? என்பது குறித்து.

ஐயமெழுப்பிய நண்பர்களுக்கு இது. அறிய.

இதுவே முடிவல்ல.

இன்னும் தேட எழும்பும் உண்மைகள்.

யாரும் தேடலாம், உண்மைகள் கொணர.

No comments:

Post a Comment