Thursday, October 15, 2020

 "கணை மாரி பெய்யும்களத்தும்

 நிலை மாறோம்; நெஞ்சேகாட்டுவோம்." 


என

சூலை 25,2019 ல் பதிவிட்டிருந்தேன்.


இத்துனை நாட்கள் கழித்து "அதன் பொருள் என்ன?"

என அயலில் வசிக்கும் நண்பர் இன்று கேட்டுள்ளார்


  "He that fights and runs away, 

May turn and fight another day; 

But he that is in battle slain, 

Will never rise to fight again."

                          --Tacitus

இது அயல் மரபு.

நம் மரபோ...


"சிற்றில்  நற்றூண்  பற்றி  


நின்மகன்

யாண்டுள  னோவென  வினவுதி  யாயின்

என்மகன்  யாண்டுளன்  ஆயினும்  அறியேன்;

புலியிருந்து  போகிய  கல்லளை  போல

ஈன்ற  வயிறோ  இதுவே;

தோன்றுவன்  மாதோ  போர்க்களத்  தானே." 


என்று முழங்கி...


"நரம்பெழுந்  துலறிய  நிரம்பா  மொன்தோள்

முளரி  மருங்கின்  முதியோள் "

 

ஆயினும் 


"சிறுவன்

படையழிந்து  மாறினன்  என்றுபலர்  கூற

மண்டமர்க்  குடைந்தனன்  ஆயின்  உண்டவென்

முலையறுத்  திடுவென்  யானெனச்  சினைஇக்

கொண்ட  வாளொடு  படுபிணம்  பெயராச்

செங்களம்  துழவுவோள்  சிதைந்துவே  றாகிய

படுமகன்  கிடக்கை  காணூஉ

ஈன்ற  ஞான்றினும்  பெரிதுவந்  தனளே."


எனப்பெருமித வீரங்காட்டும் தாய் மரபல்லவா?


கணைகள் மழையாய்ப் பொழிந்தாலும்

நிலைமாறிப் புறங்காட்டோம்;


மார்பு நிமிர்த்தியே...


என்பது நம் மரபு.


மடியும்வரை.

No comments:

Post a Comment