இலக்கியச் சொல் வரிசை -29
பொருநர் ஆற்றுப்படை.
முடத்தாமக் கண்ணியார்.
பொருநர் ஆற்றுப்படை.
முடத்தாமக் கண்ணியார்.
" ...அவிழ்ப் பதம் கொள்க என்று இரப்ப..."
(பாடலில், தமிழ் மன்னன் கரிகாலன் தன்னிடம் பரிசில் பெற வந்தோரைப் பலநாட்கள் எவ்வளவு அன்புடன், என்னென்ன வகைகள் வழங்கி விருந்தோம்பினான் என்பது விளக்கப்பட்டுள்ளது.)
அறிய வேண்டிய நயமும் பண்பும் யாதெனில்:
வந்திருப்போர் பரிசில் பெற வந்தவர்கள்;மன்னன் முன் இரந்து நிற்பவர்கள். ஆனால், பண்பு நிறைந்த வள்ளல் மன்னன், ''கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று" எனும் தமிழ் மரபறிந்துணர்ந்து, 'மிகச்சிறந்த இவ்வுணவை உண்க' என முன் இருந்து மன்னன் இரந்து நிற்கிறானாம்.
'ஈஎன இரத்தல் இழிவு' எனும் மரபுள்ளதால், இங்கே கொடுப்பவன் இரக்கிறான், கொள்வோரைத் தாழ்த்தாமல்.
பெறுவோர் கை தாழாமல், தன் கையிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொல்வது போன்ற நயம் ஒளிர்கிறது.
என்ன அன்பு!
எவ்வளவு உயரிய பண்பு!
கற்போமே நம் முன்னோர் பண்பு நயத்தை.
*
No comments:
Post a Comment