Wednesday, October 7, 2020

 இலக்கியச் சொல்வரிசை- 28

பொருநர் ஆற்றுப்படை.( வரி166)

முடத்தாமக் கண்ணியார்

" காலின் ஏழ் அடிப் பின் சென்று..."

(பாடலில், தமிழர் கலைஞர்களை எவ்வளவு மதித்துப் போற்றிப் புரந்தனர் என்பதும், உயர் மரியாதை காட்டுவது எவ்வாறு என்பதும் இவ்வரியின் மூலமும் அடுத்துள சில வரிகளாலும் தெளிவுறக் காட்டப்பட்டுள்ளன.)
செய்தி யாதெனில்,
உற்ற நண்பர், உயர்ந்தோர், மூத்தோர் ஆகியவர்களை வரவேற்கும் போது ஏழடி எதிர் சென்று வரவேற்றலும், அவர்கள் விடை பெற்றுச் செல்லும் போது, ஏழடி பின்வந்து வழியனுப்புவதும் நல்மரபாம்.
( இப்பாடலில், மன்னன் கரிகாலன், தன்னிடம் பரிசில் பெற்றுச் செல்லும் பாணர்களை உயர்வுற மதித்து,மரபுக்கேற்ப,ழடி பின் நின்று, தக்கவாறு வழியனுப்பிய செய்தி குறிப்பிடப்படுகிறது.)
அறிய வேண்டியது:
தம்மில் நிலை உயர்ந்தோரல்லாத பிறரையும், தமக்குச் சமமாகப் பாவிக்கும் பண்பு நாமும் கொள்ளத்தக்கதே.
ஆறடி தள்ளி நிற்கச் சொல்லும் தற்போதைய சூழலில்,
நம் முன்னோரின் 'ஏழடி' மரியாதை மரபு நினைவிற் கொள்ள உரியதல்லவா?
*

No comments:

Post a Comment