Saturday, October 3, 2020

 
இலக்கியச்சொல் வரிசை 25
கலித்தொகை (10) வரி 2



" சிறியவன் செல்வம்போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி..."


செல்வத்துப் பயனே ஈதல் என்பதுதான் தமிழ் மரபு. 

 குடையுடை மன்னனுக்கும், கானக வேடனுக்கும் அடிப்படைத் தேவைகள் (உண்பதும் உடுத்துவதும்) ஒன்றே. பொருள் நல்வழி யில் ஈட்டலாம், பெருக்கலாம். தவறில்லை.பயன் மரம் ஊருக்குள்ளேயே பழுத்து நின்றால் பலருக்கும் பயன் கிடைக்கும்.  நிறைந்த ஊருணிபோல் பெருமனதார் செல்வம் பரந்து பயன் தரும். தேவைக்கு மிஞ்சிய  செல்வம் மற்றோர்க்கு ஈவதால் மட்டுமே பயன்.

செல்வத்தைச் சேர்த்து வைத்துத் தாமே துய்க்க எண்ணுவர் மனச் சிறியர். அவ்வறான குறுமனத்தர்களது செல்வம் குவிந்து கிடந்தாலும் அதனால் யாருக்கும் எப்பயனும் விளையப் போவதில்லை.நிழல் தரா நெடுமரம்போலத்தான் ஈயான் செல்வமும். ஈயாச்செல்வம் இசையிலாப் பாடல்; பாலையிற் காய்ந்த நிலா; நாய் கைத் தேங்காய்.

சேரந்தார்க்கும் பிறயாவர்க்கும் மிகுதியை ஈவதால் மட்டுமே செல்வம் பொருளாகும், இல்லையேலது  பயனற்றதொரு பொருளே. தன்னை நாடி வருவார்க்கு நிழல்  வழங்கும் ஆலமரம் போலத் தனைச்சேர்ந்தார்க்கும், ஏன் பிறர்க்குமே, பயனாகுமாறு செல்வத்திற்கு மதிப்புக் கூட்டுவோம்.

*






No comments:

Post a Comment