Thursday, October 1, 2020

 இலக்கியச் சொல் வரிசை - 23
கலித்தொகை (3) வரி 21.

"மேல்நின்று மெய்கூறும் கேளிர் போல்..."

கொள்ளத் தக்கவாறு நல்வழி கூறும் பண்பு வளர்ப்போம். 

நல்வழிகாட்டுவதில்,இடித்துரைக்க வேண்டியிருந்தாலும், 
மன்னனுக்குத் தயங்காமல் எடுத்துச் சொல்லும் நல்லமைச்சு மிகவும் அவசியம். 

அதுபோல், மாந்தர்க்கு உண்மையான நட்பும் உறவும், நல்லன,அல்லன எடுத்துச் சொல்லி நல்லாறுகாட்டும் பண்பும் திறனும் கொண்டிருக்க வேண்டும். 

ஏதும் இடைநுழைய வியலாத  பாங்கில்  ஒட்டியிருக்கும் இயல்பு நடபுக்கும் உறவுக்கும் நீக்கவியலா அடையாளம் ஆகும்.  அவ்வாறான இணைப்புள்ளபோது, தம் நண்பர்க்கு/ உறவுக்கு உறுதுணையாக இருப்பதென்பதே உயர் பண்பு. உறுதுணையாக இருப்பதென்பது, ஒருபடி மேல் நின்றும் மெய் எது என்பதை உணருமாறு சொல்வதும் ஆகும். அதுவே உண்மையான உறவு; அதுவே உண்மையான உறுதுணை.

நட்பீனும் நல்லன யாவும் நாமும் ஈவோம் நம்முறவுகளுக்கே.

*


No comments:

Post a Comment