இலக்கியச் சொல் வரிசை-22
கலித்தொகை.(2)
பாலை பாடிய பெருங்கடுங்கோ.
கலித்தொகை.(2)
பாலை பாடிய பெருங்கடுங்கோ.
" ...இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு"
நம் மரபில்,
இரப்பது இழிவு;
ஏற்பது இகழ்ச்சி என்றே ஓதி மக்களை
வளர்த்துள்ளார்கள்.
இருப்பினும்,
மிகவும் தவிர்க்கவே இயலாத நிலையில் ஒருவர் இரந்து இன்னொரவர்முன் நிற்க நேர்வதே நெருப்பினுள் உறைந்திருப்பதற்கு ஒப்பான அவலம், இகழ்ச்சி
எனத் தமிழர் கருத்துறுதி கொண்டிருந்தனர்.
அதே சமயத்தில்
தன்முன் வந்து 'ஏதேனும் ஈவாயாக' என்று நிர்ப்பவரக்கு ஒன்றும் ஈயா நிலையில் ஒருவர் இருப்பது இழிவின் இழிவு.அவ்வாறொருவன் உயிர்கொண்டு இருத்தலே இழிவு எனக் கருதி வாழ்ந்தனர் தமிழர்.
வீரம்,மானம் ஆகிய உயர் மறப்பண்புகளுடன், ஈகையும் ( வறியார்க்கு ஈதலும்) மிக உண்ணதப் பண்பெனக்கொண்டு வாழ்ந்த இனம் நமது.
பொருளைப் பெரிதாகக் கருதி
மிகையாகச் சேர்ப்பதிலும்
சேர்ந்திருந்த யாவற்றையும் கொடுத்துவிட்டு
இனி வந்து இரப்பார்க்கும் உதவி செய்யப் பொருள் தேடி ச் செல்ல ஆயத்தமாகும் பாங்கன்றோ பாடலில்.
இரப்பார்க்கு இல்லை எனாத மனமும் வளமும் பெறுவோம்.
*
No comments:
Post a Comment