Sunday, September 6, 2020

 " பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே."

---

6/9/2020


இலக்கியச் சொல் வரிசை-1

நற்றிணை

கபிலர்.

*

தேரா நட்பு கேடாகும்.


தேர்ந்து தெளிந்து நட்புக் கொள்ளுதல் நன்று.

எதிலுமே 'எண்ணித்துணிக' என்பதே மந்திரம்.


பெரியோர் அவ்வாறு செய்வரேயன்றி, நட்புக் கொண்டபின் நட்பினர் குணங் குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

பெரியார் வழி செல்லல் பிழையிலாதாகும்.

( கபிலர் பாடலிற் காணப்படும் சூழல்கள் /context வேறாயினும்,

வேறு வகையாகவும் ஒட்டுச் செய்ய ஏதுவான வரிகள் இங்கு பதியன்.)

No comments:

Post a Comment