Thursday, September 17, 2020

 




வெடிவாணத் திரிபோன்ற

வெள்ளைத் தாடி!

வீசுகின்ற புயலுக்குத்

தகுந்த ஜோடி!


அடியாழச் சிந்தனையைக்

கிளப்பும் ஆற்றல்!

அறிவினையும் செயலினையும்

இணைக்கும் கூட்டல்!


குடிதாங்க வந்தகொள்கை வானம்!

கேள்விக் குறியினையே

கைத்தடியாய்க் கொண்ட கோபம்!


படிப்பறிவில் மூளைகளைத்

துவைக்கச் செய்து

பகுத்தறிவில் வெளுக்கின்ற

சலவைக் கூடம்!


தமிழ்ப் பெண்ணின்

கூந்தல் கிடந்தது

பேனோடு ஈறோடு...அதைச்

சுயமரியாதைத் தைலம் தடவி

சுத்தப்படுத்தியது ஈரோடு! 


 - தஞ்சை இனியன்

No comments:

Post a Comment