Tuesday, September 22, 2020

 இலக்கியச் சொல் வரிசை-16
மலைபடு கடாம்.
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகனார்.


" திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்"

பயனெனப் பரவுவோம்.

*

திரண்ட கார்மேகம் பரந்த வானத்தை இருண்டதாக்கிப் பொழியும் மழையே

 பூமிப்பரப்பில் உயிர்கள் வாழவும், மாந்தர் வாழ்வில் அறம், பொருள் இன்பம் எனும் முக்கூட்டு நிகழவும் உறுதுணை.

இருண்ட வான் தரும் செல்வம் மழை.அம்மழை தரும் திருவே நம் வாழ்வும் வளமும்.

இருண்ட சூழலிலும், இயன்றது வழங்குவோம் வையத்துயிர்ள் ய்ய.

*

No comments:

Post a Comment