Friday, January 28, 2022

  சிறுகதை 1913

 

சங்கல்பமும் சம்பவமும்

 

கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும்தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டுகப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை எதிர்நோக்கி கனவுகண்டன.

கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும்தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டுகப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை எதிர்நோக்கி கனவுகண்டன.

 

ஒரு மரத்தைத் தவிர. அந்த மரத்துக்கு மட்டும் வெறும் பாய்மரமாக நிற்பதில் விருப்பமில்லை. அதற்கு மட்டும்ஏதாவது அதி உன்னதமான செயலை செய்யவேண்டும்இப்புவியின் உச்ச சாத்தியம் ஒன்றின் பொருட்டு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. மரம் வெட்ட வருபவர்கள் தாங்கள் அன்று வெட்டத் தேர்ந்தெடுத்த மரங்களை மரத்தின் உடலில் சுண்ணத்தால் குறிப்பார்கள். இந்த மரம் மட்டும் தன் மீது குறி விழுந்தால் தன்னுடைய நண்பர்களான அணிலையும் குருவியையும் அழைத்து அவற்றின் வாலாலும் இறகாலும் அக்குறியைத் தந்திரமாக அழித்துக்கொண்டது. தன்னுடைய விதி நிறைவேறுமென்ற நம்பிக்கையில் காத்திருந்தது.

ஒரு நாள் வேறொரு குழு வந்தது. அவர்கள் மரங்களை வெட்டி ‘பேப்பர்’ தயாரிப்புக்கு விற்கப்போவதாக பேசிக்கொண்டார்கள். அந்த மரத்துக்கு ஒரே குறுகுறுப்பு. ‘பேப்பர்’ என்றால் என்ன என்று தன்னுடைய நண்பர்களிடம் விசாரித்தது.

குருவி சொன்னது. மானுடர் சிந்தனைகளையும் கற்பனைகளையும் உருவாக்குகிறார்கள். அதுவே அவர்களின் ஆற்றலின் உச்சம். அவற்றை மற்றவர்களுக்குக் கடத்த அவற்றை காகிதத்தாளில் பொறித்து வைத்துக்கொள்கிறார்கள். அந்தக்காகிதத்தை வாசிப்பவர்கள் அறிவுபெறுவார்கள். ஆகவே காகிதம் மானுட உன்னதங்களின் ஊர்த்திஎன்றது.

இச்சொற்களை கேட்டு மரம் உவகை கொண்டது. நானும் காகிகதமாகிறேன்என்னையும் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்வாருங்கள்என்று கிளை விரித்து மரம்வெட்டிகளை அழைத்தது.

அவர்களும் வந்து அந்த மரத்தை வெட்டிக் கொண்டுசென்றார்கள். அதனை துண்டுகளாக்கி அறைத்து கூழாக்கி காகிதமாக்கினார்கள். நீளமான உருளைக் கட்டாக கப்பல் வயிற்றில் அடைத்தார்கள். காகிதமான மரம் தூரதூர தேசங்களுக்குப் பயணித்தது. கப்பலின் ஆட்டத்தில் அதற்கு குமட்டி எடுத்தது. இருந்தாலும் தன் விதியை நோக்கிச் செல்கிறோம் என்ற உற்சாகம் மனதுக்குள்ளே இருந்ததால் அந்த அசௌகரியத்தைப் பொறுத்துக்கொண்டது. நீண்ட நெடிய பயணத்தை அந்த நம்பிக்கையில் மட்டுமே கடந்தது. மெலிந்து சோர்ந்து கரைசேர்ந்தது. வந்த அலுப்பில் மூர்ச்சையடைந்தது. விழித்துப்பார்த்தால் தான் தட்டையாக்கப்பட்டு தன் உடலில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டது. ஆகாநான் பெரிய ஒன்றின் பங்காகிவிட்டேன் என்று மரத்துக்கு ஒரே குதூகலம்.

ஆனால் மரம் புத்தகமாகியிருக்கவில்லை. அது நாளிதழாக அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆடம்பர விளம்பரங்களும்மனிதர்களின் ஆணவச்செயல்பாடுகளுக்கான பரப்புரைகளும்சாரமற்ற பிரச்சாரங்களும் அதன் உடலில் எழுத்தாகக் குவிந்திருந்தன. அதனை கையிலெடுத்தவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் புரட்டாமல் குப்பையென்று அப்பாலே அதனை தூரப்போட்டார். ஏதோ பலகாரத்தை அதில் சுற்றி இன்னொருவர் விற்றார். பலகாரத்தை வாங்கிச் சாப்பிட்டவர் எண்ணைக்கசிந்த காகிதத்தை கசக்கி எறிந்தார். அப்படியாக முடிந்துபோனதுமரத்தின் உன்னதத்துக்கான கனவு.

* *

(இச்சிறுகதை எழுதப்பட்ட ஆண்டு.1913. எழுதியவர் : அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி இதழில் 1913 இல் வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று விளம்பரப்படுத்தப்பட்டு வரும்,  பாக்கியலக்ஷமி அம்மாள் (W/o வ.வே.சு. ஐயர்) பெயரில் 1915-ல் வெளியான ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக் குணங்களும் கொண்ட ஆக்கமான இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதுண்டு. ஆனால் 1905 இல் பாரதியாரின் ‘’துளஸிபாயி’’ கதை அதற்குமுன் வெளியாகியிருப்பது உண்மை.

இச்சிறுகதையை எழுத்தாளர் திலீப் குமாரும், மொழிபெயர்ப்பாளர் சுபஶ்ரீ கிருஷ்ணசாமியும் தமது  The Tamil Story’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.. அம்மணி அம்மாளைப் பற்றி மேலதிகத் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.)

 **

No comments:

Post a Comment