Saturday, September 4, 2021

தமிழ்ச் சிறுகதை வரலாறு

 வரலாறு

காலமுறைப்படி தானே வரவேண்டும்?


அதுதானே முறை?

தமிழ்ச் சிறுகதை வரலாறு மட்டும் ஏன் இன்னும் தடம் பிறழ்ந்து

தத்தளித்துக் கொண்டே கிடக்கிறது?


தமிழின் முதல் சிறுகதை என- எந்த ஆதாரமுமின்றி- 

இதுவரை சொல்லப்பட்டுவரும் வ.வே.சு ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' என்ற கதை முதன் முதலாக வெளிவந்த ஆண்டு 1915 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத  விவேக போதினி இதழ்களில்.


ஆனால்,  ஸு. பாக்யலக்ஷ்மி என்பவர் பெயரில் அக்கதை வந்துள்ளது.

வ.வே.சு.ஐயர் இப்பெயரை எங்கும் புனை பெயராகக் கொண்டு எழுதவில்லையே.


பாரதியாரின் "துளஸிபயி என்ற இரஜபுதனக்கன்னிகையின் சரித்திரம்" 

1905ல் சக்கரவர்த்தினி என்ற இதழில் வந்துள்ளது.


பாரதியார் கதைக்குப் (1905) பத்தாண்டு பின்னர் (அதுவும் வேறு ஒருவர் பெயரில்) வெளிவந்த கதை எப்படி 

வ.வே.சு.ஐயர் எழுதிய தமிழின் முதல் சிறுகதை யாகும்?


எனக்கொரு உண்மை தெரிந்தாகனுமே.?!

No comments:

Post a Comment